முதல் விஷயம் தாகத்துக்காகத் தண்ணீரைத் தேடி அலைந்த அந்தக் காகம் நிச்சயம் களைப்போடு இருந்திருக்கும் ஆனால் எவ்வளவு களைப்பாக இருந்தாலும்,தனக்குத் தேவையானதைத் தேடிப் பெறுகிற போராட்டக் குணம் அந்தக் காகத்திடம் இருந்தது. அதை மனிதனும் கற்றுக்கொள்ள வேண்டும்.
காகம் நினைத்திருந்தால், பானையின் அடிப் பகுதியைத் தன் அலகால் கொத்தி, அதில் இருந்து வெளியேறும் தண்ணீரை வேகமாகக் குடித்து, தன் தாகத்தைத் தணித்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்திருந்தால் தண்ணீர் தேடி அலையும் இன்னொரு உயிரினத்துக்கு அது கிடைக்காமல் போய்விடும் தன் தேவையை மட்டும் கருதாமல்,களைப்படைந்து இருக்கும் வேளையிலும் அடுத்தவர் பற்றி அக்கறை கொண்ட காகத்தின் அந்த மாண்பு மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று
அதைவிட முக்கியமான விஷயம் காகம் கற்களைப் பானைக்குள் போட்டு தண்ணீரை மேலே கொண்டுவந்ததன் மூலமாக களைப்போடு வரும் அடுத்த பறவை எந்தச் சிரமமும் இல்லாமல் தண்ணீர் பருகலாம்,எந்தச் சூழ்நிலையிலும் தன்னால் ஆனா உதவியை அடுத்தவருக்குச் செய்ய வேண்டும் என்ற நன்னெரியைத்தனது இந்தச் செயல் மூலமாக காகம் கற்றுத்தருகிறது
இத்தனை நாள் இந்த காக்கா கதை என்ன சொல்கிறது என்பதை யாரும் ஆய்வு செய்தது இல்லை,இதுபோல் எண்ணற்ற கதைகளும் தகவல்களும் நிறையக்கிடைக்கின்றன, ஆனால் அந்தக் கதைகளோ கருத்துக்களோ சொல்ல வரும் விஷயத்தை நாம் ஆழமாகக்கவனிப்பது இல்லை அந்தக் குரிப்பிட்டவிஷயத்தை கவனிக்கிற பார்வை என்றொரு இலக்கணம் நம்மிடம் இருப்பது இல்லை இந்த விஷயத்தையும் நாம் கவனிக்கிற பார்வைதான் புதிய சிந்தனைகளைக் கொண்டுவருகிறது