இந்த உலகில் வாழும் அனைவரும் நல்லவர்கள் தான் அவர்கள் எப்போது கெட்டவர் என்று கூறபட்டார் என்று பார்த்தால் ஒவ்வொரு மனிதனுக்கும் சந்தர்ப்பம் வரும். அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம் அவர் நல்ல சந்தர்பத்தை பயன்படுத்தினால் நல்லவராகவே இருக்கிறார்,இல்லை அவர் கெட்டசந்தர்பத்தை பயன்படுத்தினால் கெட்டவர் என்று கூறப்படுகிறார்.
ஆக ஒருவர் நல்லவர் என்று கூறுவதனால் அவர் பேச்சை வைத்தோ செயலை வைத்தோ கூறக்கூடாது அவருக்கு கெட்டசந்தர்ப்பங்கள் வந்து [பணத்தை திருடுவதற்கோ,பொருளை திருடுவதற்கோ,விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கோ,பிறரை ஏமாற்றுவதர்கோ....] அதை பயன்படுத்தாமல் விலகி இறுந்தார் என்றால் அவர் நல்லவர் தான். இந்த சந்தர்ப்பம் வாழ்க்கையில் ஒரு முறைதான் வரும் என்று சொல்ல இயலாது பலமுறை வரும் கஷ்டமான சூழ்நிலையிலும் வரும், அப்போதும் எல்லாம் அதை விட்டு விலகி இருப்பவர் தான் உண்மையில் நல்லவர்.
"சந்தர்ப்பமே வராமல் நான் நல்லவன் என்று கூறிக்கொள்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை"