Search This Blog

Monday, 9 September 2013

தவறை சுட்டிகாட்டுவது எப்படி ?



ஒருவர் ஒரு தவறு செய்தார் என்றால் அவரை நான்கு பேர் முன்ணிலையில் வைத்து அவரது தவறை சுட்டிக்காட்டுவது சரியா என்று நாம் முதலில் எண்ணிப்பார்க்க வேண்டும் ஏன்னெனில், நாம் அந்த தவறை செய்தால் அதே போல் மற்றவர்கள் முன்ணிலையில் நம்மை கேள்வி கேட்டால் நாம் அதை ஏற்று கொள்வோமா (சகித்து கொள்வோமா) என்று எண்ணிப்பார்க்க வேண்டும், நாம் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் பின்பு நாம் ஏன் மற்றவருக்கு அதை செய்யவேண்டும்.

பின்பு தவறை சுட்டிகாட்டுவது எப்படி ?

தவறு செய்தவரை  தனியாக அழைத்து அவர் செய்த தவறை சுட்டிக்காட்டி தவறை சரி செய்து கொள்ளுமாறு கூறுவது தானே சிறந்தது, "நாமும் இதை தானே மற்றவர்கள் இடமிருந்து எதிர்பார்ப்போம்"

குறிப்பு :-
                 நான் இங்கு தனக்கு தெரியாமலே தவறு செய்தவர்களை பற்றி தான் கூறியிருக்கிறேன், தவறு என்று தெரிந்தே செய்தவர்களை பற்றியோ அல்லது எப்போதும் தவறே செய்பவர்கள் பற்றி கூறவில்லை.  

Related Posts Plugin for WordPress, Blogger...