Search This Blog
Wednesday, 1 June 2011
சிக்னலை வார்த்தையாக்கும் சூப்பர் மூளை
லண்டன்: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பேசும் சக்தியை இழந்தவர்களையும் பேச வைக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். வாஷிங்டன் பல்கலைக்கழக நரம்பியல் துறை வல்லுநர்கள் எரிக் லூதர்ட் தலைமையில் மூளையின் செயல்பாடுகள் மற்றும் வார்த்தை உருவாகும் விதம் குறித்த சிறப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 4 நோயாளிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். மூளையின் செயல்பாட்டை தொடர்ச்சியாக கண்காணித்து சீராக்கும் வகையில் அவர்களது தலையில் 64 எலக்ட்ரோடுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த எலக்ட்ரோடுகள் உதவியுடன் அவர்களது மூளையின் செயல்பாடுகள் கணினி மூலம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டன. ஆய்வில் தெரியவந்தது பற்றி எரிக் கூறியதாவது:
மூளையின் ஆழ் பகுதியில் ஒரே நேரத்தில் சுமார் 40-க்கும் அதிகமான ஒலி மற்றும் சமிக்ஞைகள் வார்த்தைகளாக மாற்றம் செய்யப்படுகிறது. இவற்றை கணினியின் ப்ரத்யேக சாப்ட்வேர் உதவியுடன் எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஓ, ஆ, இ, ஈ போன்ற ஒலிகளே பெரும்பாலும் வார்த்தைகளாக மாற்றம் பெறுகிறது. இதில் மூளையின் வென்கி மற்றும் ப்ரோகாஸ் ஆகிய பகுதிகளின் பங்கீடு அதிகம். இப்பகுதிகள்தான் ஒலி அலைகளை வார்த்தைகளாக மாற்றுகின்றன. நாம் யோசிக்க ஆரம்பித்ததும் அவை ஒலி மற்றும் சமிக்ஞைகளாக மூளைக்குச் சென்று உடனடியாக வார்த்தைகளாக மாறுகிறது.
மூளையில் அப்பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தால் ஒலி அலைகள் வார்த்தைகளாக மாறாது. அவர்களால் பேச முடியாது. பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு பேசஇயலாத நிலையில் உள்ளவர்களின் தலையில் எலக்ட்ரோடுகளை பொருத்தி அவர்களை பேச வைக்க முடியும். அதற்கான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. என்ற இணையதள முகவரியிலோ, 0422-6611210, 6611200 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு அறியலாம்.
Labels:
தமிழ் நியூஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment