Search This Blog

Friday, 27 May 2011

“குகிளின் புதிய கிளவுட் கம்ப்யுடிங் லேப்டாப்”




குகிள் நிறுவனம் ஒரு புதிய வகையான ‘கிளவுட் கம்ப்யுடிங் லேப்டாப்பை’ (Cloud Computing Laptop) ‘குகிளின் குரோம்நோட்புக்’  என அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த லேப்டாப் இயங்க, புரோக்ராம்கள், மென்பொருள்கள் மற்றும் தகவல் செமிப்புக்கால் யாவும் கூகிள் நிறுவனத்தின் ‘செர்வர்களிலேயே’ இருக்கும். இதனால் இந்த லாப்டப் இயங்க இன்டர்நெட் கண்டிப்பாக தேவை. இவ்வாறு தகவல்களை, மென்பொருள்களை தூரமாக சேமித்து யாவருக்கும் வழங்கும் முறையை ‘கிளவுட்’என்று கூறுகிறார்கள். 

இந்த லேப்டாப் கொண்டு செய்யவேண்டியதை  இண்டர்நெட் மூலமாக கூகிள் தளத்திலிருந்தே செய்யலாம். உங்களது புகைப்படங்களை, ஆவணங்களை எல்லாவற்றையும் இவ்வாரே  சேமித்து தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.



லேப்டாப்பில் மென்பொருள் இல்லையாதலாலும், செயல் திறன் குறைவாகவே தேவைப்படுவதாலும்,  லேப்டாப்புகளின் விலை மிகவும் குறையும். இது தவிர மிக விரைவாக டிவி யை செயல்படுத்துவது போல லேப்டாப்பை இயங்க வைக்கலாம், பேட்டரி சக்தியையும் நாள்கணக்கில் நீட்டிக்கலாம் என பெரிய பட்டியலே வாசிக்கலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...