Search This Blog

Friday, 27 May 2011

உலகின் முதலாவது பெண் பிரதமர்

இலங்கைப் பெண்மணியான சிறிமாவோ பண்டாரநாயக்கா உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். இவர் 1916 ஏப்ரல் 17 இல் ரத்தினபுரி நகரில் ஒரு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார். 1940 இல் இலங்கையின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவரான எஸ்.டப்ளிவ். ஆர்.டி. பண்டாரநாயக்காவை மணந்த பின் பொதுப் பணிகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டார்.

1956 -ல் இலங்கையின் பிரதமரான அவரது கணவர், 1959 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். அதையடுத்து 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டு உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்கு உரியவரானார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...