Search This Blog

Showing posts with label முதலுதவி. Show all posts
Showing posts with label முதலுதவி. Show all posts

Monday, 19 December 2011

முதலுதவி - 2 ( திடீரென வலிப்பு ஏற்பட்டு துடிப்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் ? )




திடீரென வலிப்பு ஏற்பட்டு துடிப்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் ?


வலிப்பு உள்ளவரின் அருகில் கூர்மையான பொருட்கள் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். "சாவிக்கொத்து,இரும்பு கொடுத்தால் வலிப்பு நின்று விடும்" என்று பலர் நம்புகிறார்கள். இது தவறான அணுகுமுறை. இவை எங்காவது இடுத்து, விபரீதங்கள் நடக்கவே வாய்ப்பு உள்ளது. அதே போல், வலிப்பு வந்தவர்களின் கை, கால்களை கட்டவும் கூடாது.

அவரது வாயிலிருந்து வெளியேறும் நுரை வெளியே விழும்வகையில், தலையை ஒரு பக்கமாக சாய்த்தோ,ஒருக்களித்தோ படுக்க வைக்கவேண்டும். தண்ணீர் உட்பட குடிக்க எதுவும் கொடுக்கக் கூடாது. புரையேறும்.

வலிப்பு வந்தவர்களுக்கு நாக்கு கடிபடாமல் இருக்க, வாயில் ஸ்பூன் வைக்கலாமா ?

கூடவே கூடாது. இதனால் பற்களும் நாக்கும் சேதமாகலாம். அதற்குப்பதிலாக, பந்து போல் சுருட்டப்பட்ட ஒரு சுத்தமான துணியை வாயில் வைக்கலாம். இதனால் சுவாசமும் தடைபடாமல் இருக்கும். சிறிது நேரத்தில், வலிப்பு தானே அடங்கியதும் டாக்டரிடம் கொண்டுசெல்ல வேண்டும்.

முதலில் எந்தப் பக்கம் வலிப்பு வந்தது என்பதை டாக்டரிடம் சொன்னால், அவருக்கு சிகிச்சையில் உதவிகரமாக இருக்கும். அதேபோல், மயக்கத்துக்கு முன்பு பேசியிருந்தால், அதையும் சொல்லுங்கள். மூளை சேதமடையவில்லை  என்பதற்கு அது ஒரு டிப்ஸ்!

Saturday, 17 December 2011

முதலுதவி - 1 ( வாகன விபத்தில் தலையில் அடிபட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ? )



 வாகன விபத்தில் தலையில் அடிபட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ?

விபத்து நடந்த இடத்தில்,அடிபட்டவரைச் சுற்றி கூட்டமாக நிற்பதை முதலில் தவிர்க்கவேண்டும் அடிபட்டவருக்கு காற்றோட்டமான சூழல் அவசியம்.

இடிபாடுகளுக்குள் அல்லது இரண்டு வாகனங்களுக்கிடையில் சிக்கியிருந்தால், மிக மிக கவனமாக, தலையில் அடிபடாமல் அவரை மீட்க வேண்டும்.

சுவாசம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் இதயத் துடிப்பு இருந்து, மூச்சு வரவில்லை என்றால், ஒரு கையை நெஞ்சின் மேல் வைத்து, அதை மற்றொரு கையால் அமுத்திக் கொடுத்தால், தடைபட்ட சுவாசம் வந்துவிடும்

CPR - Cardio Pulmonary Resuscitation

ADULT - CPR



CHILD - CPR ( Check Your Nail )



Related Posts Plugin for WordPress, Blogger...