Search This Blog
Showing posts with label தமிழ் நியூஸ். Show all posts
Showing posts with label தமிழ் நியூஸ். Show all posts
Friday, 29 July 2011
இணையதளங்களின் கட்டாய பதிவில் இருந்து தப்பிக்க
சில இணையதளங்கள் தனது மேலதிக சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்வதனை கட்டாயமாக்கி இருக்கும். சில தளங்கள் பதிவு செய்கிற மின்னஞ்சலை ஆக்டிவேட் செய்ய சொல்லி பொறுமையை சோதிக்கும். அந்த தளங்களில் பதிவு செய்வதற்குள் அந்த தளத்தை காணும் ஆர்வமே போய் விடும்.
அவசரத்தில் ஒரு தகவலை தேடும் நமக்கு இது பெரும் சோதனைதான். இப்படி நாம் செல்லும் பதிவை கட்டாயமாக்கும் தளங்களின் சங்கடங்களில் இருந்து தப்பிக்க ஒரு தளம் வழி செய்கிறது. பதிவு செய்யாமலேயே ஏற்கனவே உள்ள பயனர் கணக்குகளை கொடுத்து லாகின் செய்து கொள்ள முடியும்.
BugMeNot.com - இந்த தளத்தில் பயனர்கள் பகிர்ந்து கொண்ட பல தளங்களின் பயனர் கணக்குகள் உள்ளன. அவற்றை நீங்கள் உங்களுக்கு தேவைப்படும் தளங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். அந்த தளத்திற்கு சென்று நீங்கள் வேண்டும் தளத்தின் பெயரை கொடுத்து 'Get Logins' கிளிக் செய்யவும்.
அந்த தளத்தின் பல பயனர் கணக்குகள், பாஸ்வோர்ட் பட்டியலிடப்படும். அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து உபயோகிக்கவும். அதில் வரும் எல்லா பயனர் கணக்குகளும் வேலை செய்யும் என்று கூற முடியாது. ஆனால் சில கணக்குகள் வேலை செய்கிறது.
நீங்கள் பயர்பாக்ஸ் இணைய உலாவி உபயோகிப்பவராக இருந்தால் இந்த வசதியை மிகவும் எளிமையாக ஒரு நீட்சி (Extension) மூலம் பயன்படுத்தலாம். அந்த நீட்சியை இந்த சுட்டியில் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இனி நீங்கள் வேண்டும் தளத்தின் லாகின் பக்கத்திற்கு செல்லும் போது, அங்கே வலது கிளிக் செய்து கொண்டு 'Login with BugMeNot' என்பதனை தேர்ந்தெடுத்து கொள்ளவும். தானாக பயனர் கணக்கு உள்ளீடு செய்யப்படும்.
இது அனைத்து தளங்களிலும் வேலை செய்கிறதா என்றால், இல்லை. நான் ஐந்து தளங்களில் பல்வேறு பயனர் கணக்குகளை பயன்படுத்தி பார்த்தேன். மூன்று தளங்களில் சரியாக லாகின் செய்ய முடிந்தது.
Friday, 8 July 2011
சொகுசு கார் வாங்குவதில் வளைகுடா மக்கள் சாதனை
துபாய்: உலகின் சொகுசு கார் விற்பனையில் வளைகுடா நாடுகள் முக்கிய சந்தையாக விளங்குகின்றன. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ரோல்ஸ் ராய்ஸ், பியட் நிறுவனத்தின் மசெராடி மற்றும் போர்ச் எஸ்இ ஆகிய கார்கள் இந்த ஆண்டில் வளைகுடா நாடுகளை சேர்ந்த பணக்காரர்களால் அதிகளவில் வாங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட சொகுசு கார் விற்பனை இப்போது 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபற்றி வாகன ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனர் பீர்லுகி பெல்லினி கூறுகையில், ‘‘சொகுசு கார் வாங்குவதை வளைகுடா நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் கவுரவமாக கருதுகின்றனர். அக்கம் பக்கத்து வீட்டினர், உறவினர்கள், நண்பர்கள் விலையுயர்ந்த கார் வாங்கி விட்டால், அதைவிட விலை அதிகமான காரை வாங்குவதை போட்டியாக நினைக்கின்றனர்’’ என்றார். பியட் கார் டீலர் ஒருவர் கூறுகையில், ‘‘ஏப்ரல், மே மாதங்களில் சொகுசு கார் விற்பனை அமோகம். அடுத்த சில மாதங்களுக்கு ஸ்டாக் இல்லை என்ற நிலை உள்ளது’’ என்றார்.
கார் சைஸ் விலங்கின் எலும்பு கண்டுபிடிப்பு!
மெல்பர்ன் : ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகம் மற்றும் குயின்ஸ்லேண்ட் அருங்காட்சியகத்தின் விலங்கியல் துறை நிபுணர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து புளோரா பகுதியில் கடந்த ஆண்டு ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு எலும்பு கிடைத்தது. அது மார்சூபியல் வகையை சேர்ந்த டிப்ரோடாடன் விலங்கின் கால் எலும்பு என்று தெரியவந்தது.
அதே இடத்தில் மேலும் எலும்புகள் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததால், சமீபத்தில் ஆய்வு பணி தீவிரப்படுத்தப்பட்டது. டிப்ரோடாடன் விலங்கின் மொத்த எலும்புக்கூடும் அதே இடத்தில் புதைந்திருந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ‘‘ஆஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களில் வாழ்ந்த டிப்ரோடாடன் விலங்கினம் கடந்த 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டது. பெரிய கார் சைஸில் இருந்த இது இலை, தழைகளை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளன.
மனிதன் வேட்டையாடி இவற்றை அழித்துள்ளான். இதுவரை பல முறை இவற்றின் எலும்புகள், படிமங்கள் கிடைத்துள்ளன. ஒரே இடத்தில் முழு விலங்கின் எலும்புக்கூடுகளும் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை’’ என்று ஆய்வுக்குழு தலைவர் மைக்கேல் ஆர்கர் கூறினார். ரிவர்ஸ்லே படிம மையத்தில் சுத்தம் செய்யப்பட்ட பிறகு, டிப்ரோடாடன் எலும்புக்கூடு குயின்ஸ்லேண்ட் அருங்காட்சியகத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது.
Saturday, 18 June 2011
மன அழுத்தத்தை குறைக்க செடி, கொடி வளர்க்கலாம்
லண்டன் : அலுவலக வேலை பளு காரணமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறீர்களா? இதிலிருந்து விடுபட, உங்கள் மேஜை மீது ஒரு சிறிய தொட்டியில் செடியை வைத்துக் கொள்ளுங்கள் என்கிறது ஒரு ஆய்வு.
நார்வேஜியன் யுனிவர்சிட்டி ஆப் லைப் சயின்ஸ் சுற்றுச்சூழல் உளவியல் நிபுணர் பிரிங்லிமார்க் தலைமையிலான குழுவினர், ஸ்வீடனின் உப்சலா யுனிவர்சிட்டியின் ஆய்வாளர்களுடன் இணைந்து சுற்றுச்சூழலுக்கும் மனநிலைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஓரு ஆய்வை மேற்கொண்டனர். அதன் விவரம்:
அலுவலக அறைகளில் செடி வளர்க்கப்படுகிறதா? ஊழியர்கள் உடல்நலக் குறைவு காரணமாக அடிக்கடி விடுப்பில் செல்கிறார்களா? என்பது குறித்து 385 ஊழியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. செடிகளுக்கும் ஊழியர்களின் மன உளைச்சலுக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்தது. அதாவது, அலுவலக அறையில் செடிகள் இருக்கின்ற பட்சத்தில், ஊழியர்கள் அடிக்கடி உடல்நலக்குறைவு காரணமாக லீவு எடுப்பதில்லை என தெரியவந்துள்ளது.
மேலும், அலுவலகங்களில் ஆங்காங்கே தொட்டிகளில் செடியை வளர்க்கும்போது, ஊழியர்களுக்கு மன அழுத்தம், தொண்டை வறட்சி, தலைவலி, இருமல் மற்றும் தோல் வறட்சி ஆகிய பாதிப்புகள் குறைவாக இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்தது.பொதுவாக பச்சைப் பசேல் என்ற செடி, கொடிகளை பார்ப்பதால் மனம் உற்சாகம் அடையும். நோய் குணமடைவதற்கும் இவை உதவுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
குறிப்பாக, அலுவலக பணி என்பது மூளை சம்பந்தப்பட்டது. அதிக வேலை பளு காரணமாக மூளை சோர்வடையும். இதைப் போக்குவதற்கு ஏற்றாற்போல் அலுவலகம் இயற்கை சூழலில் அமைய வேண்டும். அதை ஜன்னல் வழியே பார்ப்பதற்கு வழிவகை செய்யலாம். முடியாதபட்சத்தில், அலுவலக அறைக்குள்ளேயே தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம் என பிரிங்ஸ்லிமார்க் தெரிவித்தார்.
விண்வெளியில் விவசாய பண்ணை!
பைகானூர் : சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாய பண்ணை அமைப்பதில் ஜப்பான் விஞ்ஞானி தீவிரமாக உள்ளார். அமெரிக்கா, ரஷ்யா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நடுவானில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்து வருகின்றன. சோயுஷ் விண்கலம் மூலம் சென்று அங்கு ஆய்வகம் (பரிசோதனை கூடம்) அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அத்துடன் அங்கு விவசாய பண்ணை அமைத்து அதில் காய்கறிகளை பயிரிட திட்ட மிட்டுள்ளன
இதன் மூலம் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை அங்கேயே அவர்கள் உற்பத்தி செய்ய முடியும்
Sunday, 12 June 2011
அதிர்ச்சி .... இணையதள செக்ஸ்
இன்டர்நெட் தொடர்பில் நேரத்தை செலவிடும்.பெண்களில் 80 சதவீதம் பேர், விரைவில் செக்ஸ் ரீதியான நெருக்கடிகளில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று அதிர்ச்சியுட்டுகிறது புதிய சர்வே. இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. என்று அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள் சமூக வலைதள ஆய்வாளர்கள்
ஆன்லைனில் தொடர்பு கொண்டு அதில் அதிக நேரத்தை கழிக்கும் ஆண்களும்,பெண்களும் பெரும் பாலும் செக்ஸ் உறவுக்கு துண்டிவிடப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்பவர்களின் காதல் மற்றும் உடலுறவு தொடர்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதில் ஐந்தில் இரண்டு பெண்களும், ஐந்தில் மூன்று ஆண்களும் உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது ஆண்களுக்கான கட்டுடல் பற்றிய பத்திரிக்கை. இது வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட சர்வே ஆகும்.
இதில் இந்தியர்களின் நிலை என்ன ? செக்ஸ் குறித்து கவுன்சலிங் கொடுக்கும் பிரபல மனநல நிபுணர் கமல் குரானா இது ஒன்றும் ஆச்சரியமான தகவல் அல்ல என்று கூறி. அதிர்ச்சிக்கு உள்ளக்குகிறார். அவர் கூறுகையில்,நேரடியாக பார்க்கும்போது தான் இருவரும் தங்களுடைய எண்ணங்களை அப்பட்டமாக வெளிப்படையாக குறத் தயங்குவார்கள். ஆன்லைனில் டைப் பண்ணும்போது முகத்தை அடையலாம் காண முடியாது என்பதால் தங்களுடைய எண்ணத்தை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக தெரிவித்து விடுவார்கள். அதனால் செக்ஸ் ரீதியான எண்ணங்களும் இதன் மூலம் அதிகரித்து உடலுறவுக்கு வழ வகுத்து விடுகிறது என்கிறார். மேலும் உடல் மொழ மற்றும் பார்வை ஆகியவற்றின் அர்த்தம் தெரியாது என்பதால் சீக்கிரமே ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது என்பதும் இவரது வாதம் உணர்வு ரீதியாக பெண்கள் கொஞ்சம் பலவீனமானவர்கள் என்பதும் இவரது கருத்து. சங்கீதா சர்மா(27வயது) மற்றும் இவரது கணவர் இருவரும் ஆன்லைனில் தொடர்பு கொண்டு திருமணம் செய்துள்ளனர்.
ஆன்லைனில் தொடர்பு குறித்து சங்கீதா கூறுகையில்,நாங்கள் முதல் முறை கருத்து பரிமாற்றம் கொண்ட போதே நெருக்கமாகி விட்டோம். இரண்டு வாரங்கள்'சாட்'செய்து ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் அளவுக்கு பழகி விட்டோம் ஜொக்ஸ்.
எங்களுடைய பின்ன்னணி,விருப்பு வெறுப்பு என அனைத்தையும் ஆன்லைனிலெயெ பகிர்ந்து கோண்டோம் அத்னால் அவரை நேரில் பார்க்கும் போதும். அவருடவன் இணைந்து வாழ்வது வசதியாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது.ஒரே மாதத்தில் உடல்ரீதியாக நெருக்கமாகிவிட்டோம்!என்கிறார்.
ஆனால் இந்த மாதிரியான தகவல்களிலிருந்து வித்தியாசப்படுகிறார் பாருல் ஷா என்ற பெண் .இவர் கூறும்போது சிலர் இந்த மாதிரியான தொடர்புகளில் தவறான தகவல்களை தந்து நம்மை ஏமாற்றி விடுவார்கள்.இப்படித்தான் மூன்று வாரங்களாக என்னிடம் தொடர்பு கொண்ட பாய் பிரண்ட் ஒருவன், அவனைப் பற்றி ஏராளமான நல்ல விஷயங்களை தந்தான். அவனுடைய தவல்கள் எனக்கு மகிழ்ச்சியை அதிகரிக்க...அவனை நெரில் சந்தித்தேன்.பின்னர்தான் அவன் சொன்ன் அனைத்து தகவல்களும் பொய் என்றும்.அவன் தவறனவன் என்றும் தெரிந்து கொண்டு,அவனுடைய தொடர்பை துண்டித்தென் அவன் ஆன்லைனில் காண்பித்த போட்டோவும் போலியானது!என்று ஆத்ங்கப்படுகிறார் பாருல்.
மும்பையில்,மருத்துவமனை நடத்திபவரும் மன நல மருத்துவர் சவ்வி கண்ணா கூறுகையில்,
சர்வே தரும் தகவல்கள் அதிர்ச்சியானது அல்ல.ஆண் பெண் இருவரருமே முகத்தைக் காட்டாமல் சாட்டிங் செய்வதால் எல்லாவற்றையும் வெளிப்படையாக தெரியப் படுத்துவார்கள் இதற்கு பெண்களும் விதிவிலக்கு அல்ல என்பதால் பெண்கள் ஆன்லைன் தொடர்பில் அதிகமாக ஈடுபட்டு ,மனம் திறந்து பெசி மனதை பறிகொடுத்து விடுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டிய அவலம்" என்று கூறுகிறார்
ஆன்லைனில் தொடர்பு குறித்து சங்கீதா கூறுகையில்,நாங்கள் முதல் முறை கருத்து பரிமாற்றம் கொண்ட போதே நெருக்கமாகி விட்டோம். இரண்டு வாரங்கள்'சாட்'செய்து ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் அளவுக்கு பழகி விட்டோம் ஜொக்ஸ்.
எங்களுடைய பின்ன்னணி,விருப்பு வெறுப்பு என அனைத்தையும் ஆன்லைனிலெயெ பகிர்ந்து கோண்டோம் அத்னால் அவரை நேரில் பார்க்கும் போதும். அவருடவன் இணைந்து வாழ்வது வசதியாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது.ஒரே மாதத்தில் உடல்ரீதியாக நெருக்கமாகிவிட்டோம்!என்கிறார்.
ஆனால் இந்த மாதிரியான தகவல்களிலிருந்து வித்தியாசப்படுகிறார் பாருல் ஷா என்ற பெண் .இவர் கூறும்போது சிலர் இந்த மாதிரியான தொடர்புகளில் தவறான தகவல்களை தந்து நம்மை ஏமாற்றி விடுவார்கள்.இப்படித்தான் மூன்று வாரங்களாக என்னிடம் தொடர்பு கொண்ட பாய் பிரண்ட் ஒருவன், அவனைப் பற்றி ஏராளமான நல்ல விஷயங்களை தந்தான். அவனுடைய தவல்கள் எனக்கு மகிழ்ச்சியை அதிகரிக்க...அவனை நெரில் சந்தித்தேன்.பின்னர்தான் அவன் சொன்ன் அனைத்து தகவல்களும் பொய் என்றும்.அவன் தவறனவன் என்றும் தெரிந்து கொண்டு,அவனுடைய தொடர்பை துண்டித்தென் அவன் ஆன்லைனில் காண்பித்த போட்டோவும் போலியானது!என்று ஆத்ங்கப்படுகிறார் பாருல்.
மும்பையில்,மருத்துவமனை நடத்திபவரும் மன நல மருத்துவர் சவ்வி கண்ணா கூறுகையில்,
சர்வே தரும் தகவல்கள் அதிர்ச்சியானது அல்ல.ஆண் பெண் இருவரருமே முகத்தைக் காட்டாமல் சாட்டிங் செய்வதால் எல்லாவற்றையும் வெளிப்படையாக தெரியப் படுத்துவார்கள் இதற்கு பெண்களும் விதிவிலக்கு அல்ல என்பதால் பெண்கள் ஆன்லைன் தொடர்பில் அதிகமாக ஈடுபட்டு ,மனம் திறந்து பெசி மனதை பறிகொடுத்து விடுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டிய அவலம்" என்று கூறுகிறார்
Friday, 10 June 2011
எகிப்தில் தொலைந்த 17 பிரமிடுக்கள் கண்டுபிடிப்பு
எகிப்து: எகிப்தில் நிலத்திற்கு அடியில் புதைந்துள்ள 17 பிரமிடுக்கள் 1000 கல்லறைகள் மற்றும் 3000 பண்டைய குடியேற்றங்கள் ஆகியன செய்மதி தொழிநுட்பத்தினால் கண்டுடறியப்பட்டுள்ளன.பேர்மிங்ஹாமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.இன்ப்ரா ரெட் இமேஜிங் ( infra red imaging )என்ற தொழிநுட்பத்தின் மூலமே இவை கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு
கண்டறியப்பட்டுள்ளவற்றில் 2 பிரமிடுகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் நிலத்துக்கடியில் தோண்டி கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து 400 மைல்கள் தொலைவிலுள்ள செய்மதியில் பொருத்தப்பட்டுள்ள புகைப்படக்கருவிகள் மூலமே இவை இணங்காணப்பட்டுள்ளன. இப்புகைப்படக்கருவிகள் அதி சக்தி வாய்ந்தவை எனபதுடன் புவியின் மேற்பரப்பிலுள்ள 1 மீட்டருக்கும் குறைவான விட்டத்தை உடைய
பொருட்களையும் படம் பிடிக்கவல்லன. இது எகிப்திய வரலாற்றில் பாரிய மைல்கல்லாக கருதப்படுவதுடன் இத்தகைய பல பண்டைய கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்படலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
குழந்தைகளின் மருத்துவத்திற்கு உதவும் ஐபொட்
சளி, இருமல், காய்ச்சல், தொற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொதுவான முறைகள் தொடர்பாக அமெரிக்காவில் சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரிஸ்பைடேரியன் மார்கன் ஸ்டான்லி மருத்துவமனையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதுபற்றி மருத்துவமனையின் துணை தலைவர் டொக்டர் பெர்னாட் ஓ பிரையன் கூறியதாவது: எலும்பு முறிவு ஏற்படுதல், காய்ச்சல், தொற்றுநோய்களால் பாதிக்கப்படுதல் போன்ற சூழ்நிலைகளில் குழந்தைகள் மிகவும் சோர்ந்து விடுவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகமிக பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம்.
பொம்மைகள், விளையாட்டு பொருட்களை கொடுத்துக்கூட அவர்களது வலி, வேதனையை குறைக்கலாம் என்பது ஆய்வில் தெரியவந்தது. குழந்தைகளை அவர்களது போக்கிலேயே விட்டு சிகிச்சை அளிக்க “சில்ரன் கம்பர்ட்” என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
எலும்பு முறிவாலோ, ஆஸ்துமாவாலோ அவதிப்படும் குழந்தையின் வலி, வேதனையை குறைப்பது தான் டொக்டரின் முக்கிய நோக்கம். ஆப்பிள் நிறுவனத்தின் டேப்லட் கம்ப்யூட்டரான “ஐபொட்” கொடுத்ததில் குழந்தைகள் தெம்பும் உற்சாகமும் அடைந்துள்ளனர்.
உளவு பார்க்கும் ரோபோ கேமரா
டொரன்டோ : வானத்தில் பறந்தபடியே ஆயிரம் அடி தொலைவில் இருந்து தெள்ளத் தெளிவாக படம் எடுக்கக் கூடிய ரோபோ கேமராவை கனடாவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. கனடாவை சேர்ந்த நிறுவனம் ஏரியன் லேப்ஸ். உளவு நிறுவனங்களுக்கு தேவையான எலக்ட்ரானிக் கருவிகளை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் உருவாக்கியிருப்பது ‘ஏரியன் ஸ்கவுட்’ எனப்படும் ரோபோ கேமரா. இதில் உள்ள தொடுதிறன் மானிட்டரில் (டச் ஸ்கிரீன்) முதலில் கூகுள் நிறுவனத்தின் வேர்ல்டு மேப் சாப்ட்வேர் மூலமாக நமக்கு வேண்டிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
உதாரணமாக, ‘நியூயார்க்’ என்று தேர்வு செய்தால், ஏரியன் ஸ்கவுட் உடனே புறப்பட்டு நியூயார்க் நோக்கி பறக்கத் தொடங்கும். அங்கு சென்றதும் 500 அடி உயரத்தில் பறந்தபடியே, கீழே நடப்பவற்றை தனது டிஜிட்டல் கேமராவில் போட்டோவாக அல்லது வீடியோ காட்சியாக தொடர்ச்சியாக பதிவு செய்யும். கீழே இருந்து பார்த்தால் ரோபோவை கண்டுபிடிக்க முடியாது. சுமார் ஆயிரம் அடி தொலைவில் இருந்துகூட தெள்ளத் தெளிவான படங்களை எடுக்கும்.
பதிவாகும் காட்சிகளை இமெயிலுக்கோ, ஐபோனுக்கோ அனுப்பிக்கொண்டே இருக்கும். இதன் விலை ரூ.22 லட்சம். காரில் மிக வேகமாக செல்பவரின் முகத்தைக்கூட இக்கேமரா தெளிவாக படம் பிடிக்கும். தப்பிச் செல்லும் கொள்ளையரை பிடிக்கவும், மறைந்திருக்கும் கிரிமினல்களை பிடிக்கவும் இது உதவிகரமாக இருக்கும் என்கிறது ஏரியன் லேப்ஸ் நிறுவனம்.
அழிவின் விளிம்பில் நைட்டிங்கேல்
லண்டன் : பறவைகளில் மிகவும் அரிதானது நைட்டிங்கேல். வசீகர குரல் கொண்டது. இதன் அழகையும் குரலையும் வர்ணித்து இங்கிலாந்து கவிஞர் ஜான் கீட்ஸ் எழுதிய கவிதை உலகப் புகழ் பெற்றது. இந்த அரிய பறவையினம் அழியும் தருவாயில் உள்ளதாகவும் இன்னும் 30 ஆண்டுகளில் இது இருந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளதாகவும் பறவையின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல் உறுதியாகி உள்ளது.
இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறுவதாவது: கடந்த 40 ஆண்டுகளில் நைட்டிங்கேல் பறவை இனம் 90 சதவீதம் அழிந்து விட்டது. காடுகள் அழிக்கப்படுவதும் அதன் விளைவாக சுற்றுச்சூழல் மாசுபடுவதும் இதற்கு முக்கிய காரணம். இதுதவிர, மன்ட்ஜாக் எனப்படும் காட்டு மான் வகைகளாலும் நைட்டிங்கேல் பறவைகள் பாதிக்கப்படுகின்றன. இவை இலங்கை, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு கடந்த 1925ம் ஆண்டு வாக்கில் இடம் பெயர்ந்தவை. நைட்டிங்கேலின் கூடுகளை இவை அழித்துவிடுகின்றன.
இதன் காரணமாக நைட்டிங்கேல் பறவையினம் மெல்ல அழிந்து வருகிறது. இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நைட்டிங்கேல் பறவைகளை பாதுகாக்கும் நோக்கில் அமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது
Wednesday, 8 June 2011
மனித உருவில் குட்டி போட்ட நாய்..! : விசித்திர காணொளி!
மனிதக் குழந்தை ஒன்றை நாயக்குப் பிறந்து இருக்கின்றது என்று சொல்கின்றபோது யாராவது நம்புவீர்களா? ஆனால் உக்ரைய்ன் நாட்டில் 2007 ஆம் ஆண்டு நாய் ஒன்று ஐந்து குட்டிகளையும், ஒரு மனிதக் குழந்தையையும் பிரசவித்து இருக்கின்றது. குறித்த நாய் 5 குட்டிகளை போட்டபோதும் மனித உருவில் பிறந்த குட்டி பிறந்த உடனையே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உங்களுக்காக புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை இணைக்கின்றோம்.
உங்கள் கணணியை பாதுகாக்க
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் நம்முடைய கணணிக்கு ஆபத்தும் வளர்ந்து வருகிறது. தினம் தினம் புது புது வைரஸ்களும், மால்வேர்களும் உருவாகிக்கொண்டே இருக்கிறது.
இதனை தடுக்க நாம் பல ஆன்டிவைரஸ்களை உபயோகப்படுத்துகிறோம். இணையத்தில் ஏராளமான இலவச ஆன்ட்டி வைரஸ் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் உபயோகபடுத்தப்படுகிறது.
இப்பொழுது இந்த ஆன்ட்டிவைரசில் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இதன் பதிப்பான 6.0.1000 இருந்து பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 6.0.1125 என்ற புதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
1. அவஸ்ட் மென்பொருளை அனைவரும் உபயோக படுத்த காரணமே வைரஸ் மற்றும் மால்வேர்களை சரியாக கண்டறிந்து அழிக்கிறது.
2. கணணியில் ஏதாவது புதிய வைரஸ் நுழைய முயன்றாலே தகவல் தெரிவித்து அதை அழித்து விடுகிறது.
3. இணையத்தில் சில மால்வேர் பாதிக்கப்பட்ட தளங்களுக்கு சென்றால் நமக்கு தகவல் தருகிறது.
4. வன்தட்டுக்களில் குறிப்பிட்ட அளவே இடத்தை எடுத்து கொள்வதால் கணணியின் வேகம் குறைவதில்லை.
5. வேகமாக கோப்புகளை ஸ்கேன் செய்ய கூடியது.
6. கோப்புகளை உபயோகித்து கொண்டிருந்தாலும் ஸ்கேன் செய்யும்.
7. ஸ்கிறீன் சேவர்களையும் ஸ்கேன் செய்யும் வசதி.
8. கணணி பூட் ஆகும் போதே ஸ்கேன் செய்யும் வசதி NT/2000/XP உபோகிப்பவர்களுக்கு மட்டும்.
இந்த மென்பொருளை நிறுவும் முறை:
நீங்கள் இந்த ஆன்ட்டிவைரசை ஏற்கனவே உபயோகித்து கொண்டு இருந்தால் நீங்கள் சுலமாக இந்த அப்டேட் வெர்சனை நிறுவி கொள்ளலாம்.
முதலில் கீழே டாஸ்க்பாரில் உள்ள அவஸ்ட் லோகோ மீது வலது க்ளிக் செய்து வரும் விண்டோவில் Update என்பதை க்ளிக் செய்து பிறகு Program என்பதை க்ளிக் செய்தால் போதும் உங்கள் கணணியில் புதிய பதிப்பு இன்ஸ்டால் ஆகிவிடும்.
ஏற்கனவே இந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை உபயோகிக்காதவர்கள் கீழே உள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள்
.
Tuesday, 7 June 2011
தடுப்பு மருந்துகள் விலைக் குறைப்பு
உலகின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்கள், ஏழை நாடுகளில் விற்கப்படுகின்ற தம்முடைய தடுப்பு மருந்துகள் சிலவற்றின் விலையில் பெரிய அளவிலான குறைப்புகளை அறிவித்துள்ளன. டயரியா எனப்படும் வயிற்றோட்டம், நிமோனியா எனப்படும் நுரையீரல் பாதிப்பு, காசநோய் மற்றும் வேறு பல நோய்களுக்கான சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற உயிர்காக்கும் மருந்துகளின் விலைகள் குறைக்கப்படுகின்றன. உலகில் இப்படியான கொடிய நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்துள்ள
கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகளை கொண்டு சேர்ப்பதில் உதவி வருகின்ற தடுப்பு மருந்து மற்றும் நோயெதிர்ப்பு மருந்துளுக்கான உலகக் கூட்டமைப்பான GAVI (Global Alliance for Vaccines and Immunisation) தனது இலக்குகளை எட்ட இந்த விலைக் குறைப்பு உதவும். தடுப்பூசி போட்டிருந்தால் தவிர்த்திருக்கலாம் என்பது மாதிரியான நோய்களால் மட்டும் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறார்கள் உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் இருபத்தைந்து லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இல்லாதப்பட்ட குழந்தைகளிடம் தடுப்பூசிகளை கொண்டு சேர்ப்பதிலுள்ள மிகப் பெரிய தடை - அந்த தடுப்பு மருந்துகளில் கூடுதலான விலைகள்தான். இவ்வகையான தடுப்பு மருந்துகளை ஏழை நாடுகள் கூட்டாக வாங்கி பகிர்ந்துகொள்வதில் ஒருங்கிணைப்பு பணி ஆற்றிவருகின்ற GAVI அமைப்பு மூவாயிரத்து எழுநூறு கோடி டாலர்கள் நிதி பற்றாக்குறையில் தத்தளித்து வருகிறது. இப்படியான ஒரு சூழ்கவிில், தடுப்பு மருந்துகளுக்கு மேற்குலக நாடுகள் கொடுக்கின்ற விலையை GAVI அமைப்பு கொடுப்பதென்பது சாத்தியம்அல்ல.
தற்போது பல பெரிய மருந்து உற்பத்தி நிறுவனங்கள், தங்களுடைய தடுப்பு மருந்துகள் சிலவற்றை ஏழை நாடுகளுக்கு தாம் விற்றுவருகின்ற
விலையில் பெரிய அளவில் குறைப்புகளைச் செய்துள்ளன. GAVI அமைப்பின் மூலமாக விற்கப்படுகின்ற மருந்துகளின் விலைகளைக் குறைப்பதாக கிளாக்ஸோ ஸ்மித் க்லைன், மெர்க், ஜான்சன் அண்ட் ஜான்சன், சனோஃபி அவெண்டிஸ் போன்ற நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ள ரோட்டாவைரஸ் என்ற வயிற்றுப் போக்கை உண்டாக்கும் கிருமிக்கான தடுப்பு மருந்து ஏழை நாடுகளுக்கு விற்றுவரப்படுகின்ற விலையில் 67 சதவீதம் குறைக்கப்படுவதாக கிளாக்ஸோ
அறிவித்துள்ளது.
செல்வந்த நாடுகளில் இந்த மருந்துகளின் விலையை ஏற்றுவதன் மூலம் ஏழை நாடுகளுக்கு இந்த மருந்துகள் விலை குறைக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு ஏழை நாடுகளில் இனி இரண்டரை டாலருக்கு விற்கப்படவுள்ள இந்த ரோட்டாவைரஸ் தடுப்பு மருந்து அமெரிக்கா போன்ற ஒரு செல்வந்த நாட்டில் இனி ஐம்பது டாலர்களுக்கு விற்கப்படும். டிப்திரியா அதாவது தொண்டையடைப்பான், டெட்டனஸ் எனப்படும் நரம்பிழுப்பு நோய் , பெர்டஸ்ஸிஸ் அதாவது கக்குவான் இருமல், ஹெப்பாடிடிஸ் பி அதாவது மஞ்சள் காமாலை நோய். ஹீமோஃபீலஸ் இன்ஃபுலுவென்ஸா பி எனப்படும் இரத்தக் காய்ச்சல் போன்ற ஐந்து நோய்களுக்குமான தடுப்பு மருந்துகளின் விலையைக் குறைப்பதாக சீரம் இண்ஸ்டிடியூட் மற்றும் பனேஷியா பயோடெக் ஆகிய இந்திய நிறுவனங்களும் சம்மதித்துள்ளன.தடுப்பு மருந்துகளின் விலைக் குறைப்பை வறுமை ஒழிப்பு ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் மற்ற மற்ற நிறுவனங்களும் விலைக்குறைப்புகளை அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அடுத்த ஐந்து வருடங்களில் மேலும் நாற்பது லட்சம் குழந்தைகளின் உயிர்களை தடுப்பூசிகள் மூலம் காப்பாற்றுவது என்ற GAVI அமைப்பின் இலட்சியம் மெய்ப்பட வேண்டுமானால், வரும் 13 லண்டனில் நடக்கவுள்ள தடுப்பு மருந்து நிதி உதவிகள் தொடர்பிலான மாநாட்டில் கொடையாளி நாடுகள் கூடுதலாக நிதி வழங்க முன்வர வேண்டும் என்று ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
Sunday, 5 June 2011
கோழி கொழுப்பில் விமான எரிபொருள்!
லாஸ்ஏஞ்சல்ஸ் : பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலை ஏறி வருகிறது. அதற்காக கார், பைக் ஓட்டாமல் இருக்க முடியுமா? எவ்வளவு விலை உயர்ந்தாலும் குறையாமல் நடக்கிறது விற்பனை. அதே நேரம்.. ‘பயன்பாட்டை குறையுங்கள், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது’ என்கிறார்கள் ஆர்வலர்கள். மாற்று எரிபொருள் குறித்த ஆய்வும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் விலங்குகளின் கொழுப்பில் இருந்து சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான விமான எரிபொருள் தயாரித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நாசா ட்ரைடன் விமான ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2 மாதங்களாக இதுதொடர்பாக தீவிர ஆய்வு நடத்தியது. கோழி மற்றும் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பயோ எரிபொரு ளை விமானத்தில் பயன்படுத்தி சோதனை நடத்தியது.
முதல் கட்ட சோதனையில் எரிபொருளின் தரம், இயந்திரங்களின் செயல்திறன், பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக எரிபொருளில் உள்ள நச்சுத்தன்மை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நைட்ரஜன் மற்றும் ஹைட்ரோ கார்பன் சுற் றுச்சூழலில் மாசுபாட்டை ஏற்படுத்தும் என்பதால் எரிபொருளில் இதன் அளவு குறித்த கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்த அளவு அதிகரிக்கும் போது எரிபொருள் பயன்பாட்டு அங்கீகாரம் நிராகரிக்கப்படும். இந்த ரசாயனங்கள் காற்றில் கலந்தால் மனிதர்களுக்கு சுவாசக் கோளாறு, இதய பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக விமானங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாடு உடனடி பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை தவிர்க்க ஆரம்ப கட்டத்திலேயே எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த பரிசோதனையிலும் கோழி எரிபொருள் வெற்றி பெற்றுள்ளது.
இறுதிக்கட்டமாக நிறம், தரப் பரிசோதனைக்கு எரிபொருள் உட்படுத்தப்பட்டது. இதில் 90 சதவீதம் கார்பன் மாசுபாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சல்பேட், ஆர்கானிக் ஏரோசால், உள்ளிட்ட ஜெட் எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை திருப்திகரமாக பூர்த்தி செய்து உள்ளது. இறுதிகட்ட ஒப்புதலுக்கு பிறகு விரைவில் கோழி எரிபொருள் அறிமுகப்படுத்தப்ப டுகிறது.
Friday, 3 June 2011
சவுதியில் 2030-ல் 16 அணு உலைகள்
துபாய்: வரும் 2030-ம் ஆண்டுக்குள் 16அணு உலைகள் நிறுவப்பட்டு அதன் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்து கொள்ள சவுதி அரேபியா முடி வு செய்துள்ளது. உலகில் அதிக அளவில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. இங்கு ஆண்டு தோறும் மின் தேவையின் அளவு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை ஈடுசெய்யும்வகையில் அணுமின் நிலையங்களை அமைக்க உள்ளதாக அரபு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமி பாதிப்பில் சிக்கிய அணுமின் நிலையங்களின் தற்போதைய நிலைமையை <உணர்ந்த பின்னரும் சவுதி அரேபியா அணுமின் நிலையம் மூலம் மின் உற்பத்தி செய்து தன்னுடைய மின் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடிவு செய்துள்ளது.இதற்காக ஆண்டுக்கு 2 வீதம் ஒவ்வொரு அணு உலைக்கும் 7 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் வரும் 2030-ம் ஆண்டிற்குள் மொத்தம் ரூ 100 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் குறைந்த பட்சம் 16 அணு உலைகளை நிறுவ முடிவு செய்துள்ளது.
தற்போதைய அந்நாட்டின் மின் உற்பத்தியை ஒப்பிடும்போது அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 7 முதல் 8 சதவீதம்வரை மின் பயன்பாடு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அணுமின் சக்தி மூலம் சுமார் 20 சதவீத அளவிற்கு மின் தேவைப்பாடை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக சவுதியின் அறிவியல் அறிஞர் அப்துல் கானி பின் மெலாய்பாரி தெரிவித்துள்ளார்
வெள்ளரிரிக்காய்க்கு அரபு நாடுகள் தடை
துபாய்: ஸ்பெயின், ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வெள்ளரிக்காய் இறக்குமதி செய்வதற்கு ஐக்கிய அரபு நாடுகள் தடைவிதித்துள்ளது. மேற்கண்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளரிக்காயில் இ.கோலி வகை பாக்டீரிய õ இருப்பதே காரணமாகும். வளைகுடா நாடுகளின் சுற்றுப்புற சூழல் துறை அமைச்சகம் இத்தடையை விதித்திருப்பதாக வாம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் வளைகுடா நாடுகளை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்÷வோர் காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என வளைகுடா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகமும் அறிவுறுத்தியுள்ளது.
ஒசாமா வேட்டைக்கு சென்ற ராணுவ நாயை வாங்க போட்டி
பாஸ்டன்: சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது, அப்பணியில் ஈடுபட்ட ராணுவ நாயை தத்தெடுக்க கடும் போட்டி உருவாகியுள்ளது.
அமெரிக்க ராணுவத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பது, மீட்புப் பணிகளில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்தபோது, அமெரிக்க கடற்படையின், "சீல் படைப்பிரிவு' அதிரடி தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலின் போது, அமெரிக்க ராணுவத்துடன், சிறப்பு பயிற்சி பெற்ற, "கெய்ரோ' என்ற நாயும் கொண்டு செல்லப்பட்டது. பின்லாடன் தப்பி ஓடினால் குதறிப் பிடிக்கவும், வெடிகுண்டு உள்ளிட்டவற்றை கண்டுபிடித்து எச்சரிக்கவும் இந்த நாய் கொண்டு செல்லப்பட்டது. இந்த நாய், பின்லாடன் தாக்குதலில் பங்கேற்று வெற்றிகரமாக திரும்பி வந்துள்ள நிலையில், அதற்கு விரைவில் ஓய்வு அளிக்கப்பட உள்ளது. இந்த நாயை தத்தெடுக்க கடும் போட்டி உருவாகியுள்ளது. மே மாதம் 2ம் தேதிக்குப் பின், கெய்ரோவை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்து இதுவரை 400 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, 2 June 2011
மொபைல் பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் வருமாம்
"மொபைல் போன் பயன்படுத்துவதால், மூளைப் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. கூடுமானவரை குறுஞ்செய்திகள் மற்றும் ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்தினால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்' என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரான்சின் லியோன் நகரில் இயங்கி வரும் ஐ.நா., உலக சுகாதார அமைப்பின், சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி ஏஜன்சி (ஐ.ஏ.ஆர்.சி.,) நடத்திய எட்டு நாள் மாநாட்டில், 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி. இதில், பேசிய விஞ்ஞானிகள், "மொபைல் போன்களால் மூளைப் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது' என, கவலை தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக இதற்கான இரு ஆய்வுகள் நடந்தன.
ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே மொபைல் போன் பயன்படுத்தும் தனி நபர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். மொபைல் போன்களில் இருந்து வெளிவரும் ரேடியோ அலைகளின் மின்காந்தப் புலங்கள், ஒரு வகையான புற்றுநோயை உருவாக்குகிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக மொபைல் போன் பயன்படுத்துவதால் நேரிடும் விளைவுகள் குறித்து இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. இந்த ஆய்வு, இது போன்ற நோய்கள் வரலாம் என்பதற்கான எச்சரிக்கை தான்;
உறுதிப்படுத்தப்பட்டதல்ல. எனினும், மூளைப் புற்றுநோய் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த ஆய்வின் மூலம், அதற்கும் மொபைல் போன் பயன்பாட்டிற்கும் உறுதியான தொடர்பு உள்ளது என்பது நிறுவப்படவில்லை. அதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை மட்டுமே காட்டுகின்றன. இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க, அதிக நேரம் மொபைல் போனை காதில் வைத்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக குறுஞ்செய்திகள் மற்றும் ஹெட்போன்கள், ஸ்பீக்கர் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Wednesday, 1 June 2011
அதிக நேரம் செல்போனில் பேசினால் கேன்சர்: உலக சுகாதார அமைப்பு
ண்ட நேரம் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாற்றாக, குறுஞ்செய்திகள் அனுப்புதல், ஹெட்போன் பயன்படுத்துவதன் மூலம் இந்த ஆபத்தை தவிர்க்கலாம் என்றும் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு கிளியோமா என்ற மூளை புற்றுநோய் தாக்கக் கூடும் என்றும் இந்த அமைப்பு மேலும் கூறியுள்ளது.
சிக்னலை வார்த்தையாக்கும் சூப்பர் மூளை
லண்டன்: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பேசும் சக்தியை இழந்தவர்களையும் பேச வைக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். வாஷிங்டன் பல்கலைக்கழக நரம்பியல் துறை வல்லுநர்கள் எரிக் லூதர்ட் தலைமையில் மூளையின் செயல்பாடுகள் மற்றும் வார்த்தை உருவாகும் விதம் குறித்த சிறப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 4 நோயாளிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். மூளையின் செயல்பாட்டை தொடர்ச்சியாக கண்காணித்து சீராக்கும் வகையில் அவர்களது தலையில் 64 எலக்ட்ரோடுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த எலக்ட்ரோடுகள் உதவியுடன் அவர்களது மூளையின் செயல்பாடுகள் கணினி மூலம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டன. ஆய்வில் தெரியவந்தது பற்றி எரிக் கூறியதாவது:
மூளையின் ஆழ் பகுதியில் ஒரே நேரத்தில் சுமார் 40-க்கும் அதிகமான ஒலி மற்றும் சமிக்ஞைகள் வார்த்தைகளாக மாற்றம் செய்யப்படுகிறது. இவற்றை கணினியின் ப்ரத்யேக சாப்ட்வேர் உதவியுடன் எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஓ, ஆ, இ, ஈ போன்ற ஒலிகளே பெரும்பாலும் வார்த்தைகளாக மாற்றம் பெறுகிறது. இதில் மூளையின் வென்கி மற்றும் ப்ரோகாஸ் ஆகிய பகுதிகளின் பங்கீடு அதிகம். இப்பகுதிகள்தான் ஒலி அலைகளை வார்த்தைகளாக மாற்றுகின்றன. நாம் யோசிக்க ஆரம்பித்ததும் அவை ஒலி மற்றும் சமிக்ஞைகளாக மூளைக்குச் சென்று உடனடியாக வார்த்தைகளாக மாறுகிறது.
மூளையில் அப்பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தால் ஒலி அலைகள் வார்த்தைகளாக மாறாது. அவர்களால் பேச முடியாது. பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு பேசஇயலாத நிலையில் உள்ளவர்களின் தலையில் எலக்ட்ரோடுகளை பொருத்தி அவர்களை பேச வைக்க முடியும். அதற்கான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. என்ற இணையதள முகவரியிலோ, 0422-6611210, 6611200 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு அறியலாம்.
Subscribe to:
Posts (Atom)