Search This Blog
Friday 8 July 2011
கார் சைஸ் விலங்கின் எலும்பு கண்டுபிடிப்பு!
மெல்பர்ன் : ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகம் மற்றும் குயின்ஸ்லேண்ட் அருங்காட்சியகத்தின் விலங்கியல் துறை நிபுணர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து புளோரா பகுதியில் கடந்த ஆண்டு ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு எலும்பு கிடைத்தது. அது மார்சூபியல் வகையை சேர்ந்த டிப்ரோடாடன் விலங்கின் கால் எலும்பு என்று தெரியவந்தது.
அதே இடத்தில் மேலும் எலும்புகள் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததால், சமீபத்தில் ஆய்வு பணி தீவிரப்படுத்தப்பட்டது. டிப்ரோடாடன் விலங்கின் மொத்த எலும்புக்கூடும் அதே இடத்தில் புதைந்திருந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ‘‘ஆஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களில் வாழ்ந்த டிப்ரோடாடன் விலங்கினம் கடந்த 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டது. பெரிய கார் சைஸில் இருந்த இது இலை, தழைகளை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளன.
மனிதன் வேட்டையாடி இவற்றை அழித்துள்ளான். இதுவரை பல முறை இவற்றின் எலும்புகள், படிமங்கள் கிடைத்துள்ளன. ஒரே இடத்தில் முழு விலங்கின் எலும்புக்கூடுகளும் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை’’ என்று ஆய்வுக்குழு தலைவர் மைக்கேல் ஆர்கர் கூறினார். ரிவர்ஸ்லே படிம மையத்தில் சுத்தம் செய்யப்பட்ட பிறகு, டிப்ரோடாடன் எலும்புக்கூடு குயின்ஸ்லேண்ட் அருங்காட்சியகத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment