சுமார் 30 வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டில் சைக்கிள் என்ற மிதி வண்டி தான் இருந்தது அதனால் சுகாதாரத்திற்கு கேடு ஏதும் விளைவிக்கவில்லை தற்போது விஞ்ஞானம் மாற்றம் நாகரிகம் வளர வளர ஒவ்வெரு வீட்டிலும் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர் இதன் இடையே சாலையில் வேன்கள்,லாரிகள் மற்றும் பஸ்கள் அதிகமாக ஓடுகின்றன அதில் இருந்து வெளிப்படும் நச்சுக்காற்று. நாம் சுவாசிக்கும் போது உடல்நலத்தை பாதிக்கப்படுகின்றது மேலும் சுற்றுப்புறச்சூழலையும்,சுகாதாரத்தையும் மாசுபடுத்துகின்றன .
முன்பு நம் கடைக்கு,வேலைக்கு,உள்ளூர் இடங்களுக்கு செல்ல சைக்கிளிலோ அல்லது நடந்தே செல்வோம் தற்போது தெரு முனையில் உள்ள கடைக்கு செல்ல பைக்கில் தான் செல்கிறோம் இதனால் காற்று மாசுபடுவது மற்றும் இல்லாமல் நம் உடலுக்கு கேடு உண்டாக்கிகொள்கிறோம். தற்போதைய இயந்திர உலகில் உடல் பயிற்சி,நடைபயணம்,உணவு கட்டுப்பாடு எதுவும் இல்லை. இதனால் நமக்கு ( ரத்த அழுத்தம் ,டயாபெடிக்ஸ் ,உடல் பருமன் ) போன்ற நோய்கள் வருகின்றன. அதனால் நம் முடிந்தவரை வாகனத்தில் செல்லாமல் நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்வது நமக்கும் நம் வாழும் உலகிற்கும் நல்லது.
இப்பொழுது நம்ம தலைப்புக்கு வருவோம், அதிக வாகன புகையால் நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவது இல்லை அதனால் நம் வீட்டில் இரண்டு மரமாவது நடவேண்டும். அப்போது தான் நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும், இதனால் நமக்கு மட்டும் அல்லாமல், உலகிற்கும் நல்லது. "ஓசோன் ஓட்டைன்னு" என்று சொல்கிறார்களே அதுவும் கூட மூடிவிடும்.
No comments:
Post a Comment