Search This Blog
Thursday 2 June 2011
மொபைல் பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் வருமாம்
"மொபைல் போன் பயன்படுத்துவதால், மூளைப் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. கூடுமானவரை குறுஞ்செய்திகள் மற்றும் ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்தினால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்' என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரான்சின் லியோன் நகரில் இயங்கி வரும் ஐ.நா., உலக சுகாதார அமைப்பின், சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி ஏஜன்சி (ஐ.ஏ.ஆர்.சி.,) நடத்திய எட்டு நாள் மாநாட்டில், 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி. இதில், பேசிய விஞ்ஞானிகள், "மொபைல் போன்களால் மூளைப் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது' என, கவலை தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக இதற்கான இரு ஆய்வுகள் நடந்தன.
ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே மொபைல் போன் பயன்படுத்தும் தனி நபர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். மொபைல் போன்களில் இருந்து வெளிவரும் ரேடியோ அலைகளின் மின்காந்தப் புலங்கள், ஒரு வகையான புற்றுநோயை உருவாக்குகிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக மொபைல் போன் பயன்படுத்துவதால் நேரிடும் விளைவுகள் குறித்து இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. இந்த ஆய்வு, இது போன்ற நோய்கள் வரலாம் என்பதற்கான எச்சரிக்கை தான்;
உறுதிப்படுத்தப்பட்டதல்ல. எனினும், மூளைப் புற்றுநோய் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த ஆய்வின் மூலம், அதற்கும் மொபைல் போன் பயன்பாட்டிற்கும் உறுதியான தொடர்பு உள்ளது என்பது நிறுவப்படவில்லை. அதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை மட்டுமே காட்டுகின்றன. இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க, அதிக நேரம் மொபைல் போனை காதில் வைத்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக குறுஞ்செய்திகள் மற்றும் ஹெட்போன்கள், ஸ்பீக்கர் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment