Search This Blog

Friday 3 June 2011

சவுதியில் 2030-ல் 16 அணு உலைகள்



துபாய்: வரும் 2030-ம் ஆண்டுக்குள் 16அணு உலைகள் நிறுவப்பட்டு அதன் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்து கொள்ள சவுதி அரேபியா முடி வு செய்துள்ளது. உலகில் அதிக அளவில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. இங்கு ஆண்டு தோறும் மின் தேவையின் அளவு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை ஈடுசெய்யும்வகையில் அணுமின் நிலையங்களை அமைக்க உள்ளதாக அரபு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமி பாதிப்பில் சிக்கிய அணுமின் நிலையங்களின் தற்போதைய நிலைமையை <உணர்ந்த பின்னரும் சவுதி அரேபியா அணுமின் நிலையம் மூலம் மின் உற்பத்தி செய்து தன்னுடைய மின் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடிவு செய்துள்ளது.இதற்காக ஆண்டுக்கு 2 வீதம் ஒவ்வொரு அணு உலைக்கும் 7 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் வரும் 2030-ம் ஆண்டிற்குள் மொத்தம் ரூ 100 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் குறைந்த பட்சம் 16 அணு உலைகளை நிறுவ முடிவு செய்துள்ளது.

தற்போதைய அந்நாட்டின் மின் உற்பத்தியை ஒப்பிடும்போது அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 7 முதல் 8 சதவீதம்வரை மின் பயன்பாடு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அணுமின் சக்தி மூலம் சுமார் 20 சதவீத அளவிற்கு மின் தேவைப்பாடை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக சவுதியின் அறிவியல் அறிஞர் அப்துல் கானி பின் மெலாய்பாரி தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...