Search This Blog
Wednesday 1 June 2011
‘ரோட்டு பக்கம் வராதீங்க’ கர்ப்பிணிகளுக்கு அட்வைஸ்
பிரிஸ்பேன்: பரபரப்பான சாலைகளுக்கு அருகே குடியிருக்கும் கர்ப்பிணிகளுக்கு குறை பிரசவ ஆபத்து அதிகம் என்கிறது லேட்டஸ்ட் ஆய்வு. அமெரிக்காவில் உள்ள குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் ஒரு ஆய்வை சமீபத்தில் நடத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் லோகன் சிட்டியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அங்கு பிறந்த 970 குழந்தைகள் மற்றும் அம்மாக்களை வைத்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். பிரசவ தேதிக்கு முன்னதாக பிறந்த குழந்தைகளின் அம்மாக்கள் பரபரப்பாக வாகனங்கள் செல்லும் சாலைகளின் அருகே 400 மீட்டருக்குள் வசித்தவர்கள் என்று தெரிந்தது.
முன்கூட்டியே பிரசவமாவதால், பிறக்கும் குழந்தைகள் போதிய அளவில் உடல் வளர்ச்சி இல்லாமலும் பாதிக்கப்படுகின்றனர். முழுமையான வளர்ச்சி இல்லாமல் பிறப்பதால் இன்குபேட்டரில் வைத்து பாதுகாக்கக் கூடிய நிலை ஏற்படுகிறது. காற்று மாசுபடுவது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஆய்வில் 40 வாரங்களாக உள்ள கர்ப்ப காலம் 4.4 சதவீதம் குறைந்து 38.2 வாரங்களானதும் தெரிய வந்துள்ளது.‘கர்ப்ப காலம் முழுவதும் பெண்கள் அமைதியான
இயற்கையான சூழ்நிலையில் இருப்பது நல்லது. பரபரப்பான சாலைகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இது தாய், சேய் இருவருக்கும் நல்லது’ என்று கூறியிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment