Search This Blog
Friday 3 June 2011
ஒசாமா வேட்டைக்கு சென்ற ராணுவ நாயை வாங்க போட்டி
பாஸ்டன்: சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது, அப்பணியில் ஈடுபட்ட ராணுவ நாயை தத்தெடுக்க கடும் போட்டி உருவாகியுள்ளது.
அமெரிக்க ராணுவத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பது, மீட்புப் பணிகளில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்தபோது, அமெரிக்க கடற்படையின், "சீல் படைப்பிரிவு' அதிரடி தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலின் போது, அமெரிக்க ராணுவத்துடன், சிறப்பு பயிற்சி பெற்ற, "கெய்ரோ' என்ற நாயும் கொண்டு செல்லப்பட்டது. பின்லாடன் தப்பி ஓடினால் குதறிப் பிடிக்கவும், வெடிகுண்டு உள்ளிட்டவற்றை கண்டுபிடித்து எச்சரிக்கவும் இந்த நாய் கொண்டு செல்லப்பட்டது. இந்த நாய், பின்லாடன் தாக்குதலில் பங்கேற்று வெற்றிகரமாக திரும்பி வந்துள்ள நிலையில், அதற்கு விரைவில் ஓய்வு அளிக்கப்பட உள்ளது. இந்த நாயை தத்தெடுக்க கடும் போட்டி உருவாகியுள்ளது. மே மாதம் 2ம் தேதிக்குப் பின், கெய்ரோவை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்து இதுவரை 400 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment