சளி, இருமல், காய்ச்சல், தொற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொதுவான முறைகள் தொடர்பாக அமெரிக்காவில் சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரிஸ்பைடேரியன் மார்கன் ஸ்டான்லி மருத்துவமனையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதுபற்றி மருத்துவமனையின் துணை தலைவர் டொக்டர் பெர்னாட் ஓ பிரையன் கூறியதாவது: எலும்பு முறிவு ஏற்படுதல், காய்ச்சல், தொற்றுநோய்களால் பாதிக்கப்படுதல் போன்ற சூழ்நிலைகளில் குழந்தைகள் மிகவும் சோர்ந்து விடுவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகமிக பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம்.
பொம்மைகள், விளையாட்டு பொருட்களை கொடுத்துக்கூட அவர்களது வலி, வேதனையை குறைக்கலாம் என்பது ஆய்வில் தெரியவந்தது. குழந்தைகளை அவர்களது போக்கிலேயே விட்டு சிகிச்சை அளிக்க “சில்ரன் கம்பர்ட்” என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
எலும்பு முறிவாலோ, ஆஸ்துமாவாலோ அவதிப்படும் குழந்தையின் வலி, வேதனையை குறைப்பது தான் டொக்டரின் முக்கிய நோக்கம். ஆப்பிள் நிறுவனத்தின் டேப்லட் கம்ப்யூட்டரான “ஐபொட்” கொடுத்ததில் குழந்தைகள் தெம்பும் உற்சாகமும் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment