கடலூர் மாவட்டத்தில் 5,907 கோடி ரூபாய் செலவில் புதிய அனல் மின் நிலையம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பழுப்பு நிலக்கரியைக் கொண்டு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க உதவும் இத்திட்டத்தை , நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம் செயல்படுத்த உள்ளது.
புதிய மின் திட்டம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், தென்மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படும். 500 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு பிரிவுகளாக இந்த மின் திட்டம் செயல்படுத்தப்படும். நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம், நெய்வேலியில் மூன்று அனல் மின் நிலையங்களை ஏற்கனவே இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment