கையடக்கத் அலைபேசிகள் (Cellphone) மற்றும் வயர் இணைப்பு இல்லாத இணைய (Wireless – Internet) வசதி கொண்டு இயங்கும் இணைய கணணிகள் ஆகியவை மனித உடல்நலத்திற்கு தீவிரமான ஆபத்தை விளைவிக்கலாம், என கூறப்படுகிறது. பொதுவாக மடிகணணிகளிலும், அலைபேசிகளிலும் இவ்வகை கம்பில்லா தொலைதொடர்பு வசதி இணைய தொடர்பிற்காக பயன்படுத்தப்படுவது வழக்கம்.
ஐரோப்பிய கூட்டமைப்பு கழகங்கள் நடத்திய ஆய்வில் இவைகளால் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து விளையும் என தெரியவந்துள்ளதால், பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் அவற்றை பயன்படுத்த உடனடியாக தடை விதிக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளதாக டெய்லி டெலிகிராப் எனப்படும் ‘மேற்கத்திய’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வகை தொலை தொடர்பானது, தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை விட, இவ்வகை கைத்தொலைபேசிகள் மற்றும் கணணிகளால் பெரும் ஆபத்து ஏற்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மேற்கு நாடுகளில் உள்ள பள்ளிகளில் இவற்றின் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கவும் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த புதிய தடைக்கு பல எம்.பி.க்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேற்கு நாடுகளில் ஒரு குறிப்பிட்ட விடயத்திற்கு எதிர்ப்போ, ஆதரவோ எதுவானாலும் அதற்கு பின்னணியில் பெரும் வணிக நிறுவனங்களின் வணிக ஆர்வம், மற்றும் தேவை இருப்பது வழக்கம்.
இந்நிறுவனங்கள், தங்களது வணிகங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டங்களை ஏற்ற மக்கள் பிரதிநிகளையும், அதிகாரிகளையும், அரசுகளையும் பனியா வைக்கும் நடை முறை தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு வழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment