Search This Blog

Monday 30 May 2011

சைக்கிள் இருந்தாலே போதும் செல்போனை சார்ஜ் செய்யலாம்



மின்சார தட்டுப்பாடு உள்ள இந்த காலத்தில், மின்சார பயன்பாட்டைக் குறைப்பதற்காக செல்போன் சைக்கிள் சார்ஜரை நோக்கியா ஒய்ஜ் நிறுவனம் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் அறிமுகம் செய்யப்பட்டது.
‘‘ஐரோப்பிய நாடுகளில் அலுவலகம், ஷாப்பிங் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சைக்கிளில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில்தான் சைக்கிள் வழி செல்போன் சார்ஜரை உற்பத்தி செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. குறிப்பாக ஆம்ஸ்டர்டாமில் சைக்கிள் பயன்படுத்துபவர்கள் அதிகம்.எனவேதான் இதை இங்கு அறிமுகம் செய்துள்ளோம். பின்னர் உலகின் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்’’ என நோக்கியா நிறுவன செய்தித் தொடர்பாளர் லியோ மெக்கே தெரிவித்துள்ளார்.
இந்த சார்ஜர், சைக்கிள் சக்கரம் சுற்றும்போது அதிலிருந்து முகப்பு விளக்கு எரிவதைப் போலவே, செல்போனுக்கு தேவையான மின்சாரத்தை கிரகித்துக் கொள்ளும். இதனால் மின்சார பயன்பாடு குறையும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித கேடும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார். இப்பொழுது  இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.850 ஆகும்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...