இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவைகளில் அமெரிக்காவின் பயங்கரமான உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் என விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.
பேஸ்புக், பாரிய தனிநபர் தரவுகளின் தொகுப்பெனவும், இது அதன் பாவனையாளர்களால் பராமரிக்கப்படுகின்ற போதிலும் அமெரிக்க உளவுச் சேவைக்கு பெரிதும் உதவுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
ரஸ்ய நாட்டு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றின்போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், பேஸ்புக் மட்டுமன்றி கூகுள், யாஹூ உட்பட மற்றைய பெரிய அமெரிக்க நிறுவனங்களும் அமெரிக்க உளவுச் சேவைக்கு உதவுகின்றன.
பாவனையாளர்கள் புதிய நண்பர் ஒருவரை பேஸ்புக்கில் இணைக்கும்போது அவர்கள் தாமாகவே அமெரிக்க உளவுச் சேவைக்கு உதவுவதுடன் அவர்களுக்கான தரவுத்தளத்தினையும் பெருக்குகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
செவ்வியின் நிறைவுப் பகுதியில் ஊடகங்களையும் அவர் கடுமையாக சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment