ஹரியாணா மாநிலம் பரிதாபாத் அருகே புதன்கிழமை இரவு ஆம்புலன்ஸ் விமானம் விபத்துகுளானது. இந்த விபத்தில் இரண்டு பைலட்டுகள் உள்பட 8 பேரும் உயிரிழந்தனர். பலத்த மழையுடன் கூடிய காற்றில் சிக்கி இந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என கருதபடுகிறது.
சிகிச்சைக்காக நோயாளியை பிகார் மாநிலம் பாட்னாவிலிருந்து தில்லிக்கு கொண்டு செல்லும் போது இரவு 10.45 மணி அளவில் விமானப்படை விமான நிலையம் அருகே உள்ள பார்வதி காலனி பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. சம்பவம் நடந்த இடத்துக்கு விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் சென்றனர்.
No comments:
Post a Comment