டிடிஎச் எனப்படும் வீடுகளுக்கு நேரடி தொலைக்காட்சி சேவை அளிக்கும் வசதிக்கு அடிப்படையாக திகழவிருக்கும், இந்தியாவின் அதிநவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-8 , பிரெஞ்சு கயானாவில் உள்ள ‘கொரு’ விண்வெளித் தளத்தில் இருந்து வெற்றிகரமாக அண்ட வெளிக்கு செலுத்தப்பட்டது.
ஐரோப்பிய ராக்கெட் மேலாக ஏற்றப்பட்டு காலை 2.08 மணியளவில் ஜிசாட்-8 மற்றும் ஜப்பானின் எஸ்டி-2 ஆகிய சேர்க்கை கோள்களுடன் அண்டவெளி நோக்கி, வெற்றிகரமாக ஏவப்பட்டதையிட்டு, பிரதமர் மன்மோகன் சிங் தனது மகிழ்ச்சியை, ஏவு தளத்தில் இருந்த விண்வெளித் துறைச்செயலர் கே.ராதாகிருஷ்ணனனிடம் தெரிவித்தார். செயற்கைக் கோளின் மொத்த மதிப்பு ரூ 250 கோடி. ஏவுவதற்கான செலவு ரூ 300 கோடி. காப்புறுதிக் கட்டணம் ரூ 30 கோடி, ஆகா மொத்தம், இந்த செயற்கைக்கோள் ஏவ ஆகிய மொத்த செலவு சுமார் ரூ 600 கோடியாக உள்ளது. 3,100 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக் கோள் 12 ஆண்டுகளாகும்.
இஸ்ரோ இது வரை தயாரித்த சேர்க்கை கோள்களில், அதிக எடைகொண்ட மற்றும் அதிக திறன்வாய்ந்த செயற்கைக்கோள்களில் ஜிசாட்-8 செயற்கைக்கோளும் ஒன்றாகும்.
No comments:
Post a Comment