ஐ.நா சபை வளாகம்: இந்த நூற்றாண்டின் இறுதியில் இந்திய மக்கள் தொகை 171 கோடியைத் தாண்டும் எனவும் அது குறைந்து கொண்டிருக்கும் மக்கள் தொகையை கொண்ட சீனாவை விட ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் ஐ.நா வின் ஒரு மக்கள் தொகை ஆய்வறிக்கை கூறுகிறது.
உலக மக்கள் தொகை குறித்த ஐ.நா சபையின் இந்த ஆய்வறிக்கையையின் படி, 2060ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகையானது 171 கோடியைத தாண்டியிருக்கும் எனவும் பின்னர் இந்திய மக்கள் தொகை விகிதம் மெதுவாக குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் முன்பகுதியில், அதாவது 2025ம் ஆண்டில், பரப்பளவில் இந்தியாவை விட 3 மடங்கு பெரிய சீனாவின் மக்கள் தொகை தோராயமாக 139 கோடியைத் தொட்டிருக்கும். மேலும் இதே காலகட்டத்தில், இந்திய மக்கள் தொகையானது சீனாவைவிட விஞ்சி இருக்கும் என அந்த அறிக்கை கணித்துள்ளது. இதற்க்குக்கு பின்னர், அதாவது 2025ம் ஆண்டு காலகட்டத்தை அடுத்து சீன மக்கள் தொகையின் வீழ்ச்சி தொடங்கும். எனினும், இந்தியாவில் இதே போன்ற மக்கள் தொகை வீழ்ச்சி நடப்பதற்கு மேலும் 35 ஆண்டுகள் பிடிக்கும் என அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு முன்னேறும் இந்திய மக்கள் தொகையானது, மக்கள் தொகை வீழ்ச்சியடையும் சீனாவை விட இரண்டு மடங்கு அதிகமாக நூற்றண்டி இறுதியில் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், இந்த நூற்றாண்டின் மத்திய பகுதியில், அதாவது 2050ம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 930ம் கோடியாகவும், அடுத்த நூற்றாண்டி ஆரம்பத்தில் 1,000 கோடியைத் தாண்டியும் இருக்கும் என அறிக்கை தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment