சிங்கூரில் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 1000 ஏக்கர் நிலத்தில் டாட்டா குழுமம் தொழிற்சாலை தொடங்க இருந்த நிலையில் விவசாயிகள் அரசுக்கு எதிராக மிக பெரிய போராட்டம் நடத்தினர். அப்போது எதிர் கட்சியில் இருந்த மம்தா விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தார். தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா நடத்திய போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்தப் போராட்டத்தாலேயே டாடா தனது தொழிற்சாலையை குஜராத்துக்கு மாற்றியது.
தற்போது மேற்கு வங்க முதல்வராக மம்தா இருப்பதால், 400 ஏக்கர் நிலம் போக மீதியுள்ள 600 ஏக்கரில் டாடா தனது தொழிற்சாலையை அமைத்துக்க கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை கண்டு, மே வங்காள புதிய முதல்வராக மம்தா பானர்ஜி பதவி ஏற்றதற்கு தொழிலதிபர் ரத்தன் டாடா வாழ்த்து தெரிவித்தார். மேலும் மம்தாவின் தலைமையில் மேற்கு வங்க மாநிலம் அனைத்து துறைகளிலும் நல்ல வளர்ச்சி பெறும் என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment