Search This Blog

Monday 16 May 2011

மாரடைப்பின் அறிகுறிகள்

                                                                                                             

மனிதனின் உயிர் ரத்தத்தில் தான் இருக்கிறது.  ரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் பம்ப் செய்யும் பணியை இதயம் செய்கிறது.  ஆனால் இதயம் சீராக இயங்க இயல்பான தொடார்ச்சியன் ரத்த ஓட்டம் தேவைப்படுகிறது. இதயதசைகளுக்கான் ரத்த ஓட்டம் தடைபடும் போது. இதய தசைபாதிக்கப்படுவதால் கடும் வலி ஏற்படும்  . இதையோ மாரடைப்பு என்கிறோம்.

பொதுவாக மாரடைப்பானது சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு, இதயநோய், உடல் அதிக பருமன், மனஉளைச்சல் நிறைந்த வாழ்க்கை சூழலில் வாழ்கிறவர்கள் போன்றவர்களை தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மாரடைப்பு வருவதற்கு வயதோ,பாலினமோ தடையில்லை. எந்த வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படலாம். பெண்களை பொருத்தவரையில் மாதவிடாய் காலங்களில் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மிக,மிககுரைவானது. மாதவிடாய் முழுமையாக நின்று போகும் காலத்தில் இருந்து முதுமை காலத்தில் இருபாலருக்கும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு சம அளவில் உள்ளது.

மாரடைப்புக்கான் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடக்குடியதாக இருந்தாலும் பொதுவாக மாரடைப்பு ஏற்படும் போது, மார்பின் மையப்பகுதியில் அழுத்துவது, முறுக்கி பிழிவது போன்ற வலியோ,விவரிக்க முடியாத நெஞ்சுவலியோ ஏற்படும். அந்த வழியானது இடது தோள்பட்டை, இடதுகை,வலது தோள்பட்டை,மார்பின் இரு பக்கங்கள், கழுத்து, தொண்டை முதுகுபுறம் மற்றும் வயிற்று பகுதிகளில் பரவுவதோடு, அதிக அளவில் வியர்த்துக்கொட்டுதல்,உடல் சில்லிட்டு போதல், சில நேரங்களில் மூச்சு திணறல்,அசதி,மயக்கம்,குமட்டல்,வாந்தி  போன்றவை தோன்றும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது அவசியம். முதலில் அவர்களை எந்த அலுவலையும் மேற்கொள்ளாமல்,அமைதியாக உட்கார்ந்து கொள்ளவோ, சற்று சாய்வாக படுத்துக்கொல்லவோ செய்ய வேண்டும்,நெஞ்சு வலி 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவனையில் அனுமதித்து உரிய சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டும். மாரடைப்பு ஏற்பட்ட ஓரிரு மணி நேரத்துக்குள் உரிய சிகிச்சை பெறாதவர்களில் 60 சதவீதத்துக்கும் மேலானவர்கள் மரணம் அடைகிறார்கள், உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்   







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...